தம் அடிக்கும் பிக்குகள்:முற்றுகிறது முறுகல்?


இலங்கை மகா சங்கத்தினரை பற்றி ரணில் தரப்பு அமைச்சர் ரஞ்சன் இரமநாயக்க தெரிவித்த கருத்து தலையிடியாக மாறிவருகின்றது.

புத்த பிக்குகளில் சிறுவயதில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களே குழப்படி செய்துவருவதாக அமைச்சர் கருத்து வெளியிட சிங்கள அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியிருந்தன.

இதற்கு பதிலடியாக பிக்குகள் சிகரெட் புகைக்கும் வீடியோவை வெளியிட்ட அவர் பின்னர் அதனை விலக்கிக்கொண்டார்.

இதனிடையே மகா சங்கத்தினரை அகௌரவப்படுத்தும் வகையில் அறிவிப்புச் செய்தவர்கள் மன்னிப்புக் கோரவில்லையாயின் அவருக்கு தண்டனை வழங்குவது நாட்டின் தலைவர்களது பொறுப்பாகும் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அண்மைய காலத்தில் அதிகமான அச்சுறுத்தல்களுக்கு மகா சங்கத்தினர் உள்ளாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலி, போத்தல பிரதேசத்திலுள்ள விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார்.அகௌரவப்படுத்தும் வகையில் அறிவிப்புச் செய்தவர்கள் மன்னிப்புக் கோரவில்லையாயின் அவருக்கு தண்டனை வழங்குவது நாட்டின் தலைவர்களது பொறுப்பாகும் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

No comments