மைத்திரிக்காக பலியாடாக்கப்படும் ஹேமசிறி, பூஜித?
மைத்திரியினை பாதுகாக்க பலியாடாக்கப்படும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்கள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.
இதனிடையே பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ,பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின், இருதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை குற்ற விசாரணைப் பிரிவில் இன்று முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, ஹேமசிறி பெர்ணான்டோ இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரைக் கைதுசெய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாற, சட்டமா அதிபர் தப்புல டீ. லிவேரா உத்தரவிட்டுள்ளார்.
பதில் பொலிஸ்மா அதிபருக்கே, சட்டமா அதிபர் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Post a Comment