காங்கேசன்துறைக்கு கப்பல் விடுகிறார் மோடி?


சிதம்பரம் நடராசப் பெருமான் மார்கழித் திருவாதிரை வழிபாட்டுக்குக் காங்கேசன்துறையில் இருந்து காரைக்காலுக்குக் கப்பல் விட மீண்டும் கோரியிருப்பதாக இலங்கைச் சிவசேனை தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன் அறிவித்துள்ளார்.

தில்லியில் இந்து வலிமையாக்கல் குழு உள்ளது.அவர்கள் அண்மையில் யாழ்ப்பாணம் வந்து கீரிமலையில் சங்கிலி வேந்தன் 400ஆவது நீத்தார் வழிபாட்டு நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.அதில் கலந்து கொண்டவர்களுள்; குழுத் தலைவர் அருண் உபாத்தியாயர். குழுவின் இணைப்பாளர் தீக்சா கவுசிகர் இருவரும்நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்தனர். இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் செயசங்கர் அவர்களை வரவேற்றிருந்தார்.

அப்போதே சிதம்பரம் அருள்மிகு நடராசப் பெருமான் மார்கழித் திருவாதிரை வழிபாட்டுக்குக் காங்கேயன்துறையில் இருந்து காரைக்காலுக்குக் கப்பல் விடக் கேட்டிருந்தனர்.அதற்கான ஏற்பாடு செய்து தருவதாக அப்போது இந்திய வெளிவிவகார அமைச்சர்; உறுதி கூறியதாக தெரியவருகின்றது.

இதேவேளை வழிபடு கப்பல் தொடர்பாக விரைவில் இந்தியப்பிரதமர் மோடியைச் சந்திக்கக் குழுவினர் செல்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments