வான் தாக்குதல்! லிபியாவில் 40 ஏதிலிகள் பலி!

லிபியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 40 பேர் உடல் சிதறிப் பலியாகியுள்ளனர்.

இன்று அதிகாலை.லிபியாவின் தலைநகர் திரிபோலி அருகிலுள்ள தஜோரா பகுதியில் புலம்பெயர்ந்து வாழும் ஏதிலிகள் முகாம் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இத்தாக்குதலின் போது 40 ஏதிலிகள் உடல் சிதறிப் பலியாகியதோடு மேலும் 80க்கு அதிகமானோர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த முகாமில் தங்கியிருந்தவர்கள் ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்து ஆவணம் இன்றி வந்தவர்கள் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வான் தாக்குதலை கிளர்ச்சியாளர்கள் நடத்தி உள்ளனர் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லிபியாவில் உள் நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசு படைகளுக்கும், கலிபா ஹப்டர் தலைமையிலான லிபியதேசிய ராணுவம் படையினருக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது.

இரு தரப்பினரும் வான் வழித்தாக்குதல் துப்பாக்கி சண்டை ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments