சுவிஸ் சொலதூர்னில் நீரில் மூழ்கி யாழ் இளைஞன் பலி!


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுவிஸ் நாட்டில் சொலதூர் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில்  வசித்துவரும் தமிழ் இளைஞர் ஒருவர்   நீரில் மூழ்கி  பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அறியமுடிகிறது.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட சயந்தன் எனப்படும் இளைஞன் கிட்டதட்ட இரண்டு வருடங்களாக சுவிஸ் நாடில் அகதி தஞ்சம்கோரிய நிலையில் தற்காலிக குடியுரிமை பெற்று வசித்து வந்த நிலையில் நண்பர்களுடன் அருகில் இருந்த நீர்த்தேக்கம் ஒன்றில் நேற்றைய தினம்  நீராட சென்ற வேளையில் நீருக்குள் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்த காவல்துறையினர் உடலத்தை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
No comments