ஈரானிடம் அகப்பட்ட 17 உளவாளிகள் ,மறுக்கிறது அமெரிக்கா!

அமெரிக்கவின் உளவு அமைப்பான CIA சேர்ந்த  17 பேர் ஈரானில் கைது செய்யப்பட்டு அவர்களில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியாகியுள்ளது.
 
ஈரானின் அணு சக்திதுறை , ராணுவம், மென்பொருள் போன்ற துறைகளில் அரசுக்கு உதவும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளனர். அந்த நிறுவனங்கள் மூலம் ஈரானின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியிலான தகவல்களை பெற்று  அதை அமெரிக்காவின் CIA அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்றும் அனால் இவர்கள் நேரடிய செயற்படவில்லை என்றாலும் ஈரான் நாட்டவரின் உதவியுடனே இவைகளை நிறைவேற்றியுள்ளனர்.
 
அனால் அப்படி ஏதும் நடக்கவில்லை என்றும் ஈரான்  பொய்களின் புகழிடம் என்றும் .அமெரிக்க உளவாளிகள் யாரும் ஈரானில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்றும் அப்படி  ஏதேனும் நிகழ்ந்தால் அந்நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

 
 

No comments