அவதாரின் சாதனையை முறியடித்தது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்;

கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி உலகமெங்கும் வசூல் சாதனை புரிந்து வரும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், அவெஞ்சர்ஸ் படத்தின் நான்காவது மற்றும் கடைசி பாகமாகும். ரசிகர்கள் விமர்சகர்கள் என அனைத்து தரப்பினரையும் மகிழ்வித்த இத்திரைப்படம் வெளியான அனைத்து நாடுகளிலும் அதன் பிராந்திய மொழி படங்களுக்கு இணையாக ஓடி வசூல் சாதனை புரிந்தது.
இதற்கு முன் வசூல் சாதனையில் உலகின் முதல் மூன்று திரைப்படங்களாக வரிசையில் இருந்தவை அவதார், டைட்டானிக், ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ் போன்றவை. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் ஸ்டார் வார்ஸ் மற்றும் டைட்டானிக் படங்களின் வசூல் சாதனையை முறியடித்து கடந்த மே மாதம் இரண்டாவது இடத்தைப் பெற்றது.
இந்த நிலையில், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் 9 வருடங்களாக பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்திலிருந்த ஜேம்ஸ் கேமரூனின் அவதார் பட சாதனையை முறியடித்து, தற்போது முதலிடத்தைப் பெற்றுள்ளது. சாண் டியாகோவிலுள்ள காமிக் கான் ஹாலில் நேற்று(ஜூலை 21) நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்தகவலை கெவின் பெய்ஜி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 2,789.2 பில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ள அவெஞ்சர்ஸ் பதின்மூன்று வாரங்களையும் கடந்து திரையரங்குகளில் தன் வசூல் முத்திரையை பதித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments