அப்துல் ராசிக்இற்கு ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு ?


சிலோன் தௌஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராசிக் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டவர் என்றும், அவரை உடனடியாக கைது செய்யுமாறும் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சேவைகள் அமைப்பின் தலைவர் றிசான் மஹ்ரூப் என்பவர் இந்த முறைப்பாட்டை இன்று பதிவு செய்தார்.

அப்துல் ராசிக் பல கோடி ரூபாய் நிதிகளை அரேபிய நாடுகளின் பிரஜைகளிடம் இருந்தும், உள்நாட்டில் இருந்தும் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஆனால் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் அவ்வாறு நிதி எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை என்று பொய் கூறி இருக்கிறார்.

அப்துல் ராசிக்கிற்கும் சஹ்ரானுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதுடன், அவரது அமைப்பு ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவைப் பெற்றது என்று மாருப்பின் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

No comments