மயிலிட்டி துறைமுகம் இன சிங்களவர்களிற்கே?


புனரமைக்கப்பட்டுவரும் மயிலிட்டி துறைமுகத்தின் பயன்பாடு சிங்கள மீனர்வகளுக்கே அதிகமான நன்மைகளை ஏற்படுத்துமென மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்திடம் இருந்து பொது மக்களிடம் கையளிக்கப்பட்ட யாழ்ப்பாணம் – மயிலிட்டித் துறைமுகம் நூற்று ஐம்பது மில்லியன் ரூபாய்கள் செலவில் புனரமைப்புச் செய்யப்பட்டுகின்றது. ஆனால் இந்தத் துறைமுகத்தினையண்டிய  மயிலிட்டிப் பிரதேசத்தில் பொது மக்களுக்குச் சொந்தமான மேலும் பல ஏக்கர் காணிகள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையில் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டாலும் பிரதேச மீனவர்கள் அதனை முழுமையாகப் பயன்படுத்த முடியாத ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நிர்வாகத்தை மையமாகக் கொண்ட துறைமுகங்கள் அதிகாரசபையின் கீழ் செயற்படும் மயிலிட்டித் துறைமுகத்தில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் படகுகள் நீண்டகாலமாகத் தரித்து நிற்கின்றன. அபிவிருத்தியென்ற பெயரில் தமது கடல் வளங்கள் சூறையாடப்படுவதாகவும் மீனவர்கள் கவலைப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

1990 ஆம் ஆண்டு இங்கிருந்து இடம்பெயர்ந்து சென்று மக்கள் மீண்டும் 2017 ஆம் ஆண்டு இங்கு குடியமர்த்தப்பட்டனர். ஆனாலும் முழுமையாகக் காணிகள் கையளிக்கப்படவில்லை.இங்கு மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு அவர்களது வாழ்வாதாரங்களோ வீட்டு வசதிகளோ ஏனைய கட்டமைப்புகளோ இங்கு முழுமையாக செய்து தரப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. 

No comments