செம்மலைப்பிள்ளையாருக்கு தடை?


செம்மலைப்பிள்ளையார் ஆலயத்தில் மேலதிக கட்டிடப் புனரமைப்புப்பணிகள் மேற்கொள்ள வவுனியா மேல் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் தொடர்பாக மேன் முறையீடும், மீளாய்வும் இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது குறித்து சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து வவுனியா மேல் நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டபோது மேல் முறையீட்டு இலக்கம் 100மற்றும் மீளாய்வு மனு இலக்கம் 318/2019 என்ற வழக்கில் எடுக்கப்பட்டது. மேன் முறையீடு தொடர்பாக குறித்த நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் தொடர்பாக கட்டளை நீதவானினால் வழங்கப்பட்ட தீர்ப்பு தவறு எனவும் அதனை இரத்துச் செயய்யக்கோரியும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எது எவ்வாறு இருந்தபோதிலும் குறித்த வழக்கின் கோவைகள் தயாரிக்கப்படும் வரையில் குறித்த கோவைக்கான அழைப்பினை செலுத்துமாறும் குறித்த வழக்கினை ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி ஒத்திவைக்குமாறும் மன்று கட்டளையிட்டுள்ளது. மீளாய்வு விண்ணப்பம் தொடர்பாக இன்றைய தினம் ஜனாதிபதி சட்டத்தரணி சானக ரணசிங்க தோன்றியிருந்தார். ஆலயம் சார்பாக அன்ரன் புனிதநாயகம் தோன்றியிருந்தார்.
நீதவானினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையானது சட்டத்திற்கு முரணானது எனவும் எனவே குறித்த கட்டளையை நீக்குமாறும் குறித்த வழக்கு விசாரணை மேல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கும் வரை எதுவிதமான கட்டட அபிவிருத்தியோ அல்லது மேலதிக அபிவிருத்திகளோ மேற்கொள்ளக்கூடாது எனவும் கேட்டிருந்தார். இருப்பினும் என்னால் இருக்கின்ற நிலமையில் நாங்கள் இருப்போம் எனவும் தேவையேற்படின் கௌரவ மன்றின் அனுமதியுடன் மேலதிக கட்டடங்களோ, அபிவிருத்திகளோ மேற்கொள்ள மன்றின் அனுமதியுடன் மேற்கொள்வோம் என வழங்கிய உறுதி மொழிகளையடுத்து மன்றானது குறித்த மீளாய்வு மனு மீதான எதிர் மனுதாரரான பொலிஸ் அதிகாரி முல்லைத்தீவு, சட்டமா அதிபர் மற்றும் இந்த வழக்கில் புதிதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஒரு கட்சிக்காராக சேர்க்கப்பட்டிருக்கின்றார்கள்.
அவர்களுக்கும் அறிவித்தல்கள் அனுப்புமாறும் அறிவித்தல் கிடைத்த பின்னர் மன்று இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளும் எனவும் குறித்த மீளாய்வு மனுவானது மேன் முறையீட்டுற்குட்படும் அதே தினத்தன்று 26.08.2019 அன்று நிமிக்கப்பட்டுள்ளது. நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் தொடர்பான எதாவது அபிவிருத்திகள் அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளவேண்டுமானால் உரிய சட்டத்தின் கீழ் அனுமதி பெற்றால் அதன் பின்னர் மன்றில் மேல் நீதிமன்றில் விண்ணப்பம் மேற்கொண்டு மேற்கொள்ளப்படக்கூடிய சூழ் நிலை காணப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளார்

No comments