கட்டுநாயக்க வந்துபோன மர்ம விமானம்?
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சில நாள்களுக்கு முன்னர் வருகைத்தந்திருந்த பெயர் குறிப்பிடப்படாத விமானம் தொடர்பில் தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குறித்த விமானம் தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், அரசாங்கம் இதுகுறித்த தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டுமென, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
குறித்த விமானம் சில நாள்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைதந்திருந்து மீண்டும் அங்கிருந்து கிளம்பியுள்ளது.அத்துடன், அவ்விமானம் எந்த நாட்டுக்குரியது, எதற்காக வருகைத்தந்திருந்தது போன்ற விடயங்கள் தெரியாத நிலையில் அதில் வந்தவர்கள் யார், இங்கு என்ன செய்தார்கள் போன்ற தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டுமென வலியுறுத்திள்ளார்.
Post a Comment