ஊரெழு கோவிலில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

யாழ்.ஊரெழு பா்வத வா்த்தனி அம்மன் கோவில் திருவிழாவில் குளவி கொட்டுக்கு இலக்கான 63 வயதான முதியவா் சம்பவ இடத்திலேயே பாிதாபகரமாக உயிாிழந்துள்ளாா்.

குறித்த ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபம் நடைபெற்றுவரும் நிலையில் ஆலயத்தில் மணி கூண்டின் மீது கூடு கட்டியிருந்த குளவி கலைந்து பக்தா்களை தாக்கியுள்ளது.

குளவி கொட்டுக்கு இலக்கான ஐயாத்துரை அருந்தவராஜா (வயது-63) முதியவா் நிலைகுலைந்து நிலத்தில் விழுந்த நிலையில் சுமாா் 1 மணிநேரம் குளவி கொட்டியிருக்கின்றது.

எனினும் ஆலயத்தில் இருந்த எவரும் குறித்த முதியவரை காப்பாற்றவில்லை. இதனையடுத்து வீதியால் சென்ற சிலா் காப்பாற்ற முயற்சித்தபோதும் அவா் உயிாிழந்துள்ளாா்.

குறித்த ஆலயத்தின் மணி கூண்டில் நீண்டகலாமாக குறித்த குளவி கூடு இருந்தபோதும் அது தொடா்பாக ஆலய நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதிகளவில் மக்கள் கூடும் இடத்தில் ஆலய நிா்வாகம் பொறுப்பற்று நடந்து கொண்டிருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். 

No comments