மில்லர்-திலீபனிற்கு தமிழீழ தேசமும் அஞ்சலிக்கின்றது!


தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தம்மை ஆகுதியாக்கிக்கொண்டவர்களது தியாகங்கள் என்றுமே தமிழ் மக்களது மனங்களை விட்டு நீங்க கூடியவையல்ல.அதனை அவர்கள் தமது வாழ்வியலுடன் இணைத்துக்கொண்டுள்ளார்கள்.குறிப்பாக தியாகிகளது பெயர்களை தமது பிள்ளைகிள்றகு சூட்டி வரலாற்றை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்ல அவர்கள் தவறுவதுமில்லை.

அவ்வகையில் தனது மகனிற்கு தியாகிகளது பெயரை சூட்டி மகிழ்ந்த தந்தையொருவர் துயரினுள் மூழ்கியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த ஈழ விடுதலைச் செயற்பாட்டாளர் டேவிட் பெரியார் தமிழீழ விடுதலைப்புலிகள் இனவிடுதலைப் போராட்டத்திற்காக பல்வேறு வழிகளில் உதவியவர், அதற்காக  இன்றுவரை வழக்குகளும் தண்டனைகளும் அனுபவித்து வருபவர், அவரின்  மகன் மில்லர்-திலீபன் நேற்று 21ம் திகதி மாலைவேளை  ஏரியில் மூழ்கி இறந்துள்ளார்.

இச்செய்தி தமிழக செயற்பாட்டாளர்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. அவரின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை சிறுசேரி பெரியார் நகரில் இருந்து இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் மில்லர் -திலீபனிற்னு தமிழீழ தேசமும் தனது அஞ்சலியை செலுத்திக்கொள்கின்றது.

No comments