புகையிரதக் கடவை அருகே கிடந்த இளைஞனின் சடலம்

வவுனியா- மூன்று முறிப்பு பகுதியில் புகைரத கடவைக்கு அருகிலிருந்து இளைஞா் ஒருவாின் சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது.

இன்று காலை அப்பகுதியால் சென்ற பொதுமக்கள் குறித்த சடலத்தை அடையாளம் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனா்.

இதனையடுத்து பொலிஸாா் விசாரணைகளை நடாத்தியிருந்தனா். இதன்போது குறித்த இளைஞன் கல்கமுவ பிரதேசத்தை சோ்ந்தவா் என அடையாளம் காணப்பட்டாா்.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தொடருந்துடன் மோதி அவர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சடலத்துக்கு அருகில் சில்லறைக்காசு, தீப்பெட்டி என்பனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

No comments