கேப்பாவிலவில் குண்டுவெடிப்பு

முல்லைத்தீவு கேப்பாபிலவில் அமைந்துள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்துக்கு அண்மையாக இன்றிரவு பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாரிய குழி ஒன்று ஏற்பட்டுள்ளதாக சொல்லபப்டுகிறது.

கேப்பாபிலவு பிரம்படி பகுதியில் உள்ள வயல் நிலத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது , வெடிப்பு சம்பவம் இடம்பெற்றபோது பாரிய சத்தம் கேட்டுள்ளது. இதனால் முல்லைத்தீவு நகரம் வரையுள்ள வீடுகள் கட்டடங்கள் அனைத்தும் அதிர்ந்தன.

வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கேப்பாபுலவு மக்களில் சிலரால் பொலிஸ் அவசர இலக்கத்துக்கு அழைப்பு ஏற்படுத்தி தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்தது முள்ளியவளை பொலிஸார் மற்றும் முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

இந்த வெடிப்பு சம்பவத்தால் 8 அடி ஆழமான பாரிய குழி ஒன்று ஏற்பட்டுள்ளது என பொலிஸ் தரப்பால் தெரிவிக்கப்பட்டது . நாளை நீதிமன்றின் அனுமதியுடன் மேலதிக விசாரணைகள் இப்பகுதியில் இடம்பெறவுள்ளன.

No comments