பூஜித் ஜயசுந்தரவின் பதவி பறிப்பு?
மைத்திரியின் அரசியலுக்காக பதவி நீக்கப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தரவை நிரந்தரமாக பதவி நீக்கும் சதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஏற்கனவே கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை, பணிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளே எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொலிஸ் மா அதிபராகப் பதவி வழங்கிய அதிகாரமிக்க அதிகாரியான ஜனாதிபதியால், அவரைப் பணிநீக்கம் செய்ய முடியுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் விவகாரத்தில், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றவியல் சட்டக்கோவையின் மனிதப் படுகொலைகள் மற்றும் அவற்றுக்கான உதவியை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தற்போது, பொலிஸ் காவலின் கீழ், நாரஹேன்பிட்டியில் உள்ள பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment