ஒன்று பட்டு குரல் எழுப்புங்கள் - தேர்தல் கீதம் இசைக்கிறது ரெலோமுல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் மற்றும் தென்னவன் மரவாடி முருகன் ஆலயம் ஆகியன தமிழர்களின் பூர்விக மதவழிபாட்டு இடங்கள் பௌத்த மத ஆக்கிரமிப்பினால் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில் இன்று (04.07.19) தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)வடமாகாணத்தின் பிரதிநிதிகள் இணைந்து சென்று ஆலயத்தினை பார்வையிட்டுள்ளதுடன் வணங்கி வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம்,ஆ.புவனேஸ்வரன்,சபா குகதாஸ் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவினர் ஆலயத்திற்கு சென்றனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ,

” இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது என்று சொல்லப்பட்ட 48 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை சிங்கள பௌத்த அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக தமிழர் தாயகம் திட்டமிட்ட சிங்களகுடியேற்றத்தாலும் கலைகலாச்சார மத சின்னங்களை அழிக்கும் நடவடிக்கையிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளார்கள்.
ஆண்டாண்டு காலமாக தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்தவர்கள் தமிழர்வரலாற்றினை
மாற்றிஅமைக்ககூடியவகையில் ஈடுபட்டு வருகின்றார்கள் பல திணைக்களங்கள் இவ்வாறு ஈடுபட்டு வருகின்றன.

அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் பெரிய பிரச்சனையாக ஆலயத்தினை புனரமைக்க முடியாதவாறு பௌத்த மதகுரு தடையாக இருந்து வெளி இடங்களில் இருந்து அழைத்துவரப்படும் சிங்கள பௌத்தர்களை வைத்துக்கொண்டு அச்சுறுத்துவதற்கும் இதனை காப்பாற்றுவதற்காக முன்னால் படையினரும் முகாம் அமைத்து நடவடிக்கைககள் எடுத்து வருகின்றார்கள்

தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக பாரம்பரிய பூமியில் இருந்த அடையாளங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கை எதிராக குரல் கொடுக்க நாங்கள் அனைவரும் ஒன்று பட்டு ஒரேகுரலில் நின்றால்தான் ஆகிரமிப்புக்களை தடுத்து நிறுத்த முடியும் .இதேபோல் கிழக்கு மாகாணத்தின் எல்லையில் இருக்கின்ற
தென்னவன்மரவாடி கிராமத்தில் மலையில் இருக்கின்ற முருகன் ஆலயத்தில் வழிபடுவதற்கும் அதனை புனரமைப்பதற்கும் தடைகள் விதிக்கப்பட்டு அதிலும் படையினரின் காவலரண் அமைக்கப்பட்டுள்ளன அங்கும் நாங்கள் சென்று பார்வையிடுகின்றோம்.

இவ்வாறான அரச பயங்கரவாதம் என்று சொல்லப்படுகின்ற நிகழ்ச்சி நிரலில் தமிழ் மக்களை இனரீதியாக மதரீதியாக அடையாளங்களை அழிக்கின்ற நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக எங்கள் மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டுஎழுவார்களாக இருந்தால் அரசின் முயற்சிகளை நிச்சயமாக முறியடிக்க முடியும்”

என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments