கறுப்பு ஜூலை படுகொலை வடக்கிலும், கிழக்கிலும் நினைவேந்தியது முன்னணி

கறுப்பு ஜூலை - 83இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் நடைபெற்றது.
கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தினர்.

அதேவேளை மட்டக்களப்பில் முன்னணி இணைப்பாளர் சுரேஸ் தலைமையிலும் நினைவேந்தல் ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


No comments