தமிழ் பெண் இராணுவச் சிப்பாய் மீது வீடு புகுந்து வாள்வெட்டு - ஓமந்தையில் சம்பவம்
ஓமந்தை- புதியவேலா் சின்னக்குளம் பகுதியில் பெண் இராணுவ சிப்பாய் மீது வாள்வெட்டு குழு வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியிருக்கின்றது.
இதனைத்தடுக்கச் சென்ற சகோதரன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு ஓமந்தை புதிய வேலர்சின்னக்குளம் பகுதியில் வசித்து வரும்
பெண் இராணுவச்சிப்பாயின் வீட்டிற்குள் புகுந்த பக்கத்து வீட்டுக்காரர் இராணுவத்தில் பணிபுரியவேண்டாம் அல்லது இங்கு இருக்க வேண்டாம் என்று தெரிவித்து
அப்பெண்மீது தாக்குதல் நடாத்தியுள்ளார். இதன் போது வெட்டுக் காயத்திற்குள்ளான பெண் இராணுவச்சிப்பாயை காப்பாற்றுவதற்காக ஓடிச் சென்ற சகோதரன் மீதும்
தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சகோதரியும் , சகோதரனும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெட்டுத்தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment