கிளிநொச்சியில் பாலத்தை புனரைக்குமாறு மக்கள் போராட்டம்!
கிளிநொச்சி பரவிபாஞ்சான் பாலத்தை புனரமைக்க கோரி பொது மக்கள் தண்ணீரில் இறங்கி வெள்ளிக் கிழமை (07) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் பகுதி ஏ-9 வீதியில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இரும்பு பாலம் சேதமடைந்துள்ளதால் குறித்த பாலத்தின் ஊடான போக்குவரத்து மிகவும் ஆபத்து நிறைந்ததாக காணப்படுகிறது.46 வருடங்களாக புனரமைக்கப்படாத பாலம் உடைந்து விழும் ஆபத்தான நிலைமையில் பாலம் காணப்படுகிறது.
குறித்த பாலத்தின் ஊடாக பன்னங்கண்டி, மருதநகர் கிராம மக்களும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு செல்லும் மாணவர்களும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
1980 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட பாலம் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சேதமடைந்து விடுதலைப் புலிகளால் தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டது.
குறித்த பகுதியில் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் அரசியல் துறை தலைமை அலுவலகம், அவர்களின் கல்வி பிரிவு திட்டமிடல் செயலகம் பல முக்கிய அலுவலகங்கள் காணப்பட்ட பகுதியாகும்.
தற்போது குறித்த பாலத்தின் வழி அதிகளவான மணல் ஏற்றிய ரிப்பர்கள் பயணம் செய்தமையால் குறித்த இரும்பு பாலம் சேதமுற்று இடிந்து விழும் ஆபத்தில் உள்ளது இது தொடர்பில் அரசியல் வாதிகள், கரைச்சி பிரதேச சபை என பல தரப்பினர்களிடமும் எடுத்துக் கூறியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதனால் தாங்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.




Post a Comment