வித்திக்கு 60:ரணில் ,மகிந்த வாழ்த்து?


உதயன் பத்திரிகை மற்றும் சுடர் ஒளி பத்திரிகை என்பவற்றின் முன்னாள் ஆசிரியரும் தற்போதைய காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியருமான வித்தியாகரனின் மணி விழா இன்று கொழும்பில் நடைபெற்றது.

அவரது 60 ஆவது பிறந்த நாள் விழா வெள்ளவத்தை சபாயா கோட்டலில் இன்று தமிழ் ஊடகவியாலாளர் சங்கத்தின் அனுசரனையில் நடைபெற்ற நிலையில் சிறப்பு விருந்தினர்களாக ரணில் விக்கிரமசிங்க  மற்றும் மகிந்த ராஜபக்ஸ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இவர்களுடன் டக்ளஸ்,தவராசா,மனோ கணேசன்,றிசாட் பதியூதின்,ஹக்கீம்,சுமந்திரன்,கம்பன் கழக ஜெயராஜ் என பலரும் வருகை தந்து வாழ்த்தியிருந்தனர்.

எனினும் அவரது மைத்துனரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் வருகை தந்திருக்கவில்லை.

வித்தியாதரனின் குடும்பத்தவர்களும் நிகழ்வில பங்கெடுத்திருந்தனர்.

No comments