ஆபிரிக்கரை மணக்கும் மகள்! சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;

தமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் முர்பி  என்பவரை திருமணம் செய்துகொள்ளவுள்ள நிலையில். சுதாரகுநாதனுக்கு எதிராக பல்வேறு வகையில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது, குறிப்பாக சமூகவலைத்தளத்தில் கடுமையான விமர்சனங்கள் அவர் சார்ந்த சமூகத்தினராலும் வலதுசாரி இந்துத்துவ சிந்தனை உள்ளவர்களாலும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
சுதா ரகுநாத கிருஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார் என்றும் அவரை இனிமேல் கோவில்களில் நிகழ்ச்சிகள் நடத்த மற்றும் கர்நாடக சபாக்களிலும் பாட  அனுமதிக்கக்கூடாது எனவும் வலியுறித்தியுள்ளனர்.
அத்துடன் அவது மகள் மாளவிகா திருமணம் செய்துகொள்ளப்போகும், மைக்கேல் என்பவரது நிறத்தையும் குறித்து பலரும் கடுமையான விமரச்னம் எழுப்பி வருகின்றனர். சிலர் சுதா ரகுநாதனுக்கு ஆதரவாகவும் விமர்சனங்கள் கூறிவருகின்றனர்.
இதேபோல் 2018ம் ஆண்டில், நித்யஸ்ரீ மகாதேவன் மற்றும் ஓஎஸ் அருண் ஆகியோர், கர்நாடக இசையில், கிறிஸ்தவ பாடல்களை பாடும் நிகழ்ச்சியில் பங்கேற்க கடும் எதிர்ப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

No comments