தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு யாருக்கு! சீமானுடன் மோதும் அதியமான்

அண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பயணிக்கின்றன, இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை சீமான்  ஏன் பயன்படுத்துகிறார் என விளக்கம் சொல்ல வேண்டும் எனவும் அவருக்கு சொந்தமாக சிந்திக்க மூளை  இல்லை என தமிழர் முன்னேற்றக்கழக தலைவரும் தேசியக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான கந்தசாமி அதியமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
சீமான் நாம் தமிழர் என தன் கட்சிக்கு பெயர் வைத்தார் அது ஐயா சிபா ஆதித்தனார் துவங்கிய கட்சி. தன் கட்சிக்கு புலிக்கொடியை வைத்துக்கொண்டார் அது தலைவர் உருவாக்கிய புலிக்கொடியின் நகல் இந்த இரண்டும் நாம் குறை சொல்வதற்கு இல்லை ஆனால்  இவர் தனித்துவமாக சிந்தித்து பெயர் வைக்கவில்லை   என்பதை மட்டும் நாம் விளங்கிக் கொள்ளலாம்.


அதுபோல கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் நானும் தோழர் பெருமாள் தேவன் தோழர் ராஜ்குமார் பழனிச்சாமி மூவரும் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறோம், கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலை சந்தித்தோம் தமிழர் யார் என்ற வரையறையை நம் தமிழ் மக்களுக்கு எடுத்து வைத்தோம். (அதைக் கூட இன்னும் சீமானால் ஒழுங்காக சொல்லத் தெரியாது)

இனப்பகை ஈவேரா கூட்டம் தாலி அறுப்பு போராட்டம் நடத்தினால், ஈவெரா படத்தை செருப்பால் அடிப்போம் என அடித்துக் காட்டினோம் (இவர் இன்னும் அந்த இனப்பகை ஈவெராவுக்கு மாலை போட வேண்டுமா போடக் கூடாதா என்று கூடத் தெரியாத ஒரு நபராக இருக்கிறார்) அப்படிப்பட்ட ஒருவர் கட்சியில் ஐயா வியனரசு இணைய,
 கடந்த ஆர் கே நகர்  தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு என சீமான் அறிவித்துக்கொண்டார் அந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் எங்களுக்கும் ஒரு துளியும் தொடர்பு கிடையாது

சீமான்  ஊருக்கெல்லாம் உபதேசம் செய்வார், தமிழ் இனத்துக்கு உள்ளே ஒற்றுமை வரவேண்டும் அப்படி வேண்டும் இப்படி வேண்டும் என்று.

ஆனால் இந்த தமிழினத்திற்காக பாடுபவர்களை துரோகிகளாக எதிரிகளாக கட்டமைத்து விரோதத்தை விதைப்பார்   ஆம் என்பதற்கு  நாங்கள் பயன்படுத்திவரும் கூட்டமைப்பு பெயரை எங்களை கேட்காமலே  பயன்படுத்தியது என்பதுவே ஒரு சாட்சி

 கடந்த 2013 ஆம் ஆண்டு மதுரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் நடக்க அறிவித்திருக்கும் போது அந்தக் கூட்டத்திற்கு ஈழத்தமிழர் செந்தூரன் வர இருந்தார்  அவரை நேரடியாக அழைத்து, அதியமான் நமக்கு எதிரானவன் நீ அவன் கூட்டத்திற்கு போகாதே என்று தடுத்த தலைவர் தான் இந்த சீமான்

அவர் என்ன எதிர் செயல்களை செய்தாலும் தமிழர் முன்னேற்ற கழகம் இந்த தமிழினத்திற்கான கட்சி என்ற வகையில் சீமானுக்கு அவ்வளவு தான் புத்தி என விட்டுக்கொடுப்பு போடு நான் நடந்து வந்து உள்ளேன்

ஐயா வியன்னரசிடம் நீங்கள் ஏன் இந்த பெயரை பயன்படுத்துகிறார்கள் என நான் கேட்டபோது இந்தப் பெயரை நான் கடந்த 10 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன் இதில் என்ன தவறு உள்ளது இது நம் பெயரே அல்ல இது தலைவர் வைத்த பெயர் அதனால் நீங்களும் பயன்படுத்துங்கள் நாங்களும் பயன்படுத்துகிறோம் என்று பொதுவாக கூறிவிட்டார் அதை நானும் ஏற்றுக் கொண்டேன்.
இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் சீமானைப் பார்த்து கேட்கிறேன்
வியனரசு அவர்கள் சொன்னால் கூட இது நாங்கள் பயன்படுத்தி வரும் ஒரு அமைப்பு என்பது உங்களுக்குத் தெரியுமா தெரியாதா தெரியாது என்றால் எந்த நாட்டில் நீங்கள்  அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள்?

அப்படியே அந்தப் பெயரை பயன்படுத்த வேண்டும் என்றால் எங்களிடம் கேட்டால் என்ன தவறு?
வியனரசு வந்ததால் தான் இந்த பெயரை நான் பயன்படுத்தினேன் என்று சொன்னால், வியனரசு அவர்கள் உங்கள் கட்சியை விட்டு சென்று தனியாக அமைப்பை உருவாக்கி விட்டார் அப்படிப்பட்ட நிலையில் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பெயரை நீங்கள் பயன்படுத்துவது ஏன்?
எங்களைத் தவிர வேறு யாராவது பொருளாதார பலம் மிக்கவர்கள் இந்த கூட்டமைப்பு பெயரை பயன்படுத்தி நடத்தி இருந்தால் உங்களுக்கு இந்த செயலை செய்ய துணிச்சல் வருமா

நாங்கள் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரில்  தான் இயங்க  போகிறோம் ஒரே பெயரில் இயங்குவதால் நாளை கேள்வி வரும் என்ற ஒரு நினைப்பே மனதில் இல்லையா?
என  இந்த தமிழ் சமூகத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும் ஏதோ இந்த தமிழ் சமூகத்தை தூக்கி நிறுத்தி வந்த அட்லஸ் நான் ஒருவன்தான் என நினைத்து செயல்பட நீங்கள் வேண்டாம்

இந்த இனத்திற்காக பலர் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்

 கடந்த தேர்தலில் திமுக என்பது தெலுங்கர் முன்னேற்றக் கழகம் என்று சொல்லக் கூட தைரியம் இல்லாத ஒரு நபர் தான் நீங்கள்

நீங்கள் பெரிய கட்சிக்கு தலைவராக இருக்கலாம் ஆனால் வரலாறு என்ன செய்கிறது  தெரியுமா? நான் செய்ததை நீங்கள் பின்பற்ற வேண்டும் என எழுதி வைத்துள்ளது

ஆம் நான் முருகனுக்கு மாலையிட்டேன் அதன்பிறகுதான் நீங்கள் காவடி தூக்கினார்கள்

நீண்ட நெடிய ஆய்வுக்குப் பிறகு தமிழருக்கு ஒரு மதம் தேவை என முருக மதம் என்ற ஒன்றை அறிவித்தேன் அதன் பிறகு மதம் பற்றிய அறிவித்தீர்கள்

நாங்கள் பலருடன் ஆலோசித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கினோம் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது நேரடியாக தெலுங்கர் அரசியல் ஆதிக்கத்திற்கு எதிரானது என அறிவித்தோம் ஆனால் அந்த தெலுங்கு ஆதிக்கத்திற்கு முதுகெலும்பாக இருந்து செயல்பட்ட இனப்பகை ஈவெராவுக்கு மாலை இட்டு கொண்டே நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை பயன்படுத்துகிறீர்கள் எங்களைப் போல கொள்கையில் நின்று பயன்படுத்தினால் கூட பரவாயில்லை என்று நினைப்பேன்

 உங்கள் கொள்கை வேறு எங்கள் கொள்கை வேறு

எதிலும் மேம்போக்கு அரசியல் உங்கள் கொள்கை எங்கள் கொள்கை தொலைநோக்கான கொள்கை

 இதுமட்டுமல்ல இன்னும் ஆயிரம் விஷயங்களை நாங்கள் ஆராய்ந்து முன்னெடுப்போம் அந்த ஆற்றல் எங்களுக்கு உள்ளது. அப்படி இருப்பவர்களுடன் கலந்து ஆலோசித்து இன நலன் கருதி செயல்பட்டால் அதை நாங்கள் வரவேற்போம்

ஆனால் எங்களை முட்டாளாக்குவது போல எங்கள் முன்னெடுப்புகளை நகலெடுத்து  அரசியல் செய்வதை வாடிக்கையாக கொண்டு இருந்தால் அதை நாங்கள் தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டே இருப்போம்

 ஏனென்றால் தமிழினம் மீண்டு எழ வேண்டும் ஆனால் அது ஒரு அறவழியில் தொலைநோக்கு சிந்தனையோடு மீண்டு எழ வேண்டும்

ஈவெராவுக்கு வாழ்த்துப்பா பாடி கருணாநிதிக்கு வாழ்த்துப்பா பாடி
கூடவே பிரபாகரனுக்கும் வாழ்த்துப்பா பாடி  எங்களைப் போன்றவர்களை முட்டாளாக்கி செயல்படுவதால் இனம் மீண்டெழுந்து விடாது

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் இனத்திற்காக பல கொள்கைகளை எந்தவித சமரசமுமின்றி முன்னெடுத்த ஒரு அமைப்பு. அதில் பலநூறு பேர் செயல்பட்டுள்ளார்கள் அவர்களின் ஒட்டு மொத்த உழைப்பையும் சுரண்டிப் பிழைப்பது போல எங்கள் பெயரை அபகரிக்க முயற்சிப்பதாக எனக்கு படுகிறது ஆகவே சீமான் அவர்களே இதற்கு நீங்கள் சரியான பதிலை தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments