மைத்திரி,ரணில் அடுத்து ருவன் விஜேவர்தன?


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், விசாரணைகளை முன்னெடுத்து வரும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு தனக்கு அழைப்பு விடுத்தால், அதில் சாட்சியமளிக்க செல்வதாக, இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
 தனக்கு இதுவரை அழைப்பு கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், அழைப்புக் கிடைத்தால் கண்டிப்பாக செல்வேன் என்றும், அது தனது கடமை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் தொடர்பில் மக்களைத் தெளிவுப்படுத்துவது தான் இந்த விசேட தெரிவுக்குழுவின் நோக்கம் எனத் தெரிவித்துள்ள அவர், எதிர்க்கட்சியின்  தெரிவுக்குழு தொடர்பில் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டாலும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் சகலரும் இது சிறந்த விடயமென கலந்துரையாடியதுடன், அனைவரும் இதற்கு இணக்கத்தையும் தெரிவித்திருந்ததாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மைத்திரி மற்றும் ரணிலை அழைப்பது தொடர்பில் சர்ச்சைகள் தொடரும் நிலையில் தற்போது இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தானும் செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார்.

No comments