சரத் முன்னிலையில் மகேஸ்?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மற்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஆகியோரை நாளை முன்னிலையாகும்படி அழைப்பு விடுத்துள்ளது.
தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வு நாளை பிற்பகல் 2 மணிக்கு, நாடாளுமன்ற வளாகத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது, முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மற்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவையும் முன்னிலையாகி சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இராணுவத்தளபதியை இடிஅமீனுடன் ஒப்பிட்ட சரத்பொன்டீசாகவும் விசாரணையில் பிரசன்னமாகவுள்ளார்.
நாளைய அமர்வின் சாட்சியங்களை பதிவு செய்வதற்கு ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவுக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நாளைய தினம், தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளிக்க வருமாறு கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் செயலரை் மற்றும் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் அதிகாரி ஒருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments