மைத்திரிக்கு அறிக்கை கிடைத்தது?


உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை ஏற்றுக்கொள்ள மைத்திரி மறுத்துவருகின்ற நிலையில் தன்னால் நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கையினை அவர் அவசர அவசரமாகபெற்றுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்த மூவரடங்கிய விசாரணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று மதியம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை இன்று காலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே குற்றச்சாட்டுக்களின் தொடர்ச்சியாக பதவியிழந்த முன்னைய அமைச்சர் ரவூப் ஹக்கீம், தமிழ் நாட்டின், திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க. ஸ்டாலினை சென்னையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

No comments