NGO பணிகளை அரசியலாக்குகிறது நாம்தமிழர்!

தம்பிகள் வேளச்சேரி ஏரியை சுத்தப்படுத்துகிறார்கள் பாரீர். தம்பிகள் மரக்கன்று நடுகிறார்கள் பாரீர் போன்ற விளம்பர பதாகைகளை வந்து என் சுவற்றில் ஓட்டுகிறார்கள் அவர்களுக்கு என் பதில்

ஆர்எஸ்எஸ் கூட இதுபோன்ற பணிகளை நிறைய செய்கிறது அதற்காக அவர்களின் அரசியலை ஏற்றுக்கொள்ள முடியுமா?. அரசியல் செயல்பாடுகளுக்கும் ngo செயல்பாடுகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ngo பணிகளை அரசியலாக அறுவடை செய்ய நினைப்பது ஆபத்தானது. அதிகாரத்திற்கு வருவதற்கு முன் திமுகவும் இதுபோன்ற பணிகளை செய்து இருக்கிறது.

நாம் தமிழர் தோழர்களின் இந்தப் பணி பாராட்டுக்குரியது மாற்றுக்கருத்து இல்லை ஆனால் அரசியல் தளத்தில் அது எந்த விதமான கருத்துக்களை விதைக்கிறது என்பது முக்கியம் தமிழ் உணர்வு தற்சார்பு சூழலியல் கருத்து நிலைகள் மக்களிடம் நன்மதிப்பை பெறுகின்றன உண்மையில் இவையே ஓட்டுக்கள் ஆகவும் மாறின.

ஆனால் திமுகவை காட்டி திராவிட சித்தாந்தத்தின் மீதும் தமிழகத்தின் மொழி சிறுபான்மையினர் மீதும் தமிழர்களுக்காக போராடுபவர்களை வந்தேறிகள் என்றும் பரப்பி மறைமுகமாக வளர்க்கப்படும் வன்மமும்,  பார்ப்பனிய இந்திய அரசின் மீது கூர்மை படுத்தப்படவேண்டிய முரண்களை லாவகமாக தட்டிவிடும் போக்கும் எதிர்காலத்தில் பாசிசத்திற்கே வழிவகுக்கும் என்பதுதான்..

சினிமா பாணியிலான Ngo பணிகளைவிட ஆரோக்கியமான அரசியலே மக்களுக்கு நன்மை பயக்கும்..

-அன்பே செல்வா-

No comments