பல்டியடிக்கின்றனர் முஸ்லீம் எம்பிக்கள்?


மகாநாயக்கர்களுடனான சந்திப்பினை தொடர்ந்து மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க முஸ்லீம் பாராளுமன்ற தரப்புக்கள் மும்முரமாகியிருக்கின்றன.

எனினும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சு பொறுப்புகளை ஏற்பது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தத்தமது மாவட்டங்களில் உள்ளனர். இதனால் அமைச்சு பொறுப்புகளை ஏற்பது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சு பொறுப்புகளை அடுத்த வாரம் ஏற்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments