மைத்திரியின் கனவு கலைகின்றது?


மைத்திரியின் மீண்டும் ஜனாதிபதியாகும் கனவை சிதைக்கும் நடவடிக்கைகளில் ஜக்கிய தேசியக்கட்சி முனைப்புடனேயே செயற்பட்டுவருகின்றது.

அவ்வகையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள, நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை எவ்வித தடையுமின்றி தொடர்ந்து முன்னெடுத்து செல்ல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக மகாநாயக்கத் தேரர்களை  சபாநாயகர் சந்தித்துள்ளார்.

இதனிடையே தெரிவுக்குழுவின் ஊடாக அதன் உண்மையை வெளிக்கொண்டு வருவதே தமது எதிர்பார்ப்பென்று மகாநாயக்கத் தேரர்கள்  சபாநாயகரிடம் தெரிவித்துள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துகளை தெரிவிப்பதற்காக, மகாநாயக்க தேரர்கள் சிலர் நேற்று (18) சபாநாயகர் கரு ஜயசூரியவை நாடாளுமன்றத்தில் சந்தித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக அறிவிக்க்பபட்டுள்ளது.

தெரிவுக்குழுவை முடக்க மைத்திரி மும்முரமாக செயற்பட தற்போத மகாநாயக்கத் தேரர்கள்  சபாநாயகரை சந்திக்க வைத்ததன் மூலம் அதற்கான ஆப்பு ஜக்கிய தேசிய கட்சியால் வைக்கப்
பட்டுள்ளது.

No comments