தமிழரசிற்கு தலையிடி?


இலங்கை அரசின் பங்காளியாகியிருக்கும் இலங்கை தமிழரசுக் கடசியின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் இன்று போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.யாழ்ப்பாணம் மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்துக்கு வெளியே இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

தமிழரசுக்கட்சியின் முக்கிய மாநாடொன்றி;ற்காக அனைவரும் வருகை தந்திருந்த நிலையில் இப்போராட்டம் நடந்திருந்தது. 

போராட்டத்தில் ஈடுபடடவர்கள் போர் முடிவடைந்து பல ஆண்டுகள்; கடந்துள்ள போதிலும் இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினர்.மேலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை என குற்றம் சாட்டினர்.இலங்கை அரசின் சுக போக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோடி ரூபாய் பணத்துக்கு விலை போய்விட்டனர்.இவர்கள் மக்கள் நலனில் எவ்வித அக்கறையும் காட்டவில்லை.எனவே இவர்கள் பதவிகளை துறக்க வேண்டும் என வலியுறுத்தினர். 
"காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கத்துடன் கதைக்க ஏன் தயக்குகின்றீர்கள்?","உங்களால் தீர்வு பெற இயலாது என்றால் புதிய தலைமுறைக்கு வழிவிடுங்கள்","ஏன் போர்க்குற்றவாளிகளை பாதுகாத்து கால அவகாசம் கொடுத்தீர்கள்" போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

No comments