தமிழ் இனத்தை அடிமைப்படுத்தும்திட்டத்தை நிறுத்த வேண்டும்-கௌதமன்

தமிழ் இனத்தை அடிமைப்படுத்தும்திட்டத்தை நிறுத்த வேண்டும் என இயக்குனரும் தமிழின உணர்வாளருமான கௌதமன்கோரிக்கைவிடுத்துள்ளார்.

 நாகர்கோவிலில் ஊடகவியலாளர்களிடம் கூறுகையில், ``தமிழகத்தில் மக்களை அழிக்கும் திட்டங்களை கொண்டு வரமாட்டோம் என முதல்வர் பொய் கூறுகிறார். எட்டு வழிச் சாலை என்பது தேவையில்லை. இது மக்களுக்கான சாலை இல்லை. இயற்கை வளத்தைக் கொள்ளை அடித்துக்கொண்டு செல்வதற்காகப் போடப்படும் சாலை. ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஆபத்து உள்ளது என ஜெயலலிதா தடை விதித்தார். அதை மீறித்தான் இந்தத் திட்டத்தை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை உடனடியாக தடுக்க வேண்டும். தமிழகத்தில் தண்ணீர்ப் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது. ஆனால் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.

மோடி அரசு இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ரேஷன், கல்வி, எனக் கொண்டு வந்து மாநிலங்களைப் பிளவு படுத்த வேண்டாம். தமிழ் இனத்தை அடிமைப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு செயல்படுவதை நிறுத்த வேண்டும். மதுவுக்கு எதிராகப் போராடிய நந்தினியைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது அரசு. அவரது திருமணம் தடைப்பட்டுள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும், நீதிமன்றம் ஒரு அறத்தோடு செயல்பட வேண்டும்" என்றார்

No comments