மூடிய அறைக்குள் சஹ்ரானின் மனைவி சாட்சியம்;

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சஹ்ரானின் மனைவியும், மகளும் கல்முனைக்கு அழைத்துவரப்பட்டனர்.

நீதிவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில்  ஆஜர்படுத்தப்பட்டா அவரை மூடிய அறைக்குள் விசாரணை நடத்தப்பட்டது.

இவ்விசாரணையில் 3 சாட்சியாளர்கள் வேறு வேறாக ஆஜர்படுத்தப்பட்டு நீண்ட நேர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இந்த விசாரணை குறித்து ஊடகங்களுக்கு எந்த தகவல்களும் நீதிமன்றம் வெளிப்படுத்தவில்லை.

பின்னர் சஹ்ரானின் மனைவி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு  அழைத்துச் செல்லப்பட்டு அங்கும் சிறிது நேரம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
விசாரணைகள் முடிவடைந்தத பின்னர் மீண்டும் சஹ்ரானின் மனைவியும், மகளும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

No comments