தண்ணீர் கேட்ட திருமா! கூச்சல் போட்ட பாஜகவினர்


மக்களவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இன்றைய அமர்வில் கேள்வி - பதில் நடந்து வருகிறது. எம்.பி.களின் கேள்விக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இதில்  விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர் திருமாவளவன் பேசுகையில், நீட் தேர்வு குறித்தும்  தமிழகத்தில் நிலவும்  குடிநீர் தட்டுப்பாடு குறித்தும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி கர்நாடக அரசு தண்ணீரை திறக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதற்கு கர்நாடகாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் கடும் எதிர்க்குரல் எழுப்பினர். இதனால், திருமாவளவனை உட்காரும்படி சபாநாயகர் கூறினார்.ஆனால், திருமாவளன் எழுந்து நின்றவாறே தான் இன்னும் பேச்சை முடிக்கவில்லை என்று கூறினார். எனினும், சபாநாயகர் அடுத்த எம்.பியை பேச அழைத்தார்.

இதனை அடுத்து, அவையில் இருந்த திமுக எம்.பி கனிமொழி, திருமாவளவன் தனது பேச்சை முடித்துக்கொள்ளட்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அவையில் தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியதால் திருமாவளவனை தொடர்ந்து பேச அனுமதிக்காமல், வேறு எம்.பியை பேச சபாநாயகர் அழைத்தார்.
இதனால், அவையில்  பரபரப்பு நிலவியது

No comments