ஆரம்பமாகிறது ஊபர் வாடகை உலங்கு வானூர்தி சேவை!

ஊபர் (Uber) நிறுவனம் அமெரிக்கா நியூயோர்க் மாநிலத்தில்  வாடகை உலங்கு வானூர்தி சேவையைத் தொடங்கவுள்ளது.
எதிர்வரும் யூலை மாதம் ஆரம்பமாகவுள்ள இச்சேவை நியூயார்க்கின் ஜோன் எவ் கெனடி  (John F Kennedy) அனைத்துலக வானூர்தி நிலையத்திலிருந்து லோவர் மான்கற்றன் (Lower Manhattan) வானூர்தி நிலையத்துக்குசநிலையத்துக்குச் 8 நிமிடத்தில்  செல்ல முடியும். இதற்கான  கட்டணம் 225 டோலர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
ஊபர் வாடகை மகிழுந்தில் இத்தூரத்தைக் கடக்க ஒரு மணி நேரம் பிடிக்கின்றது.
கடந்த மார்ச் மாதம் பிளேட் ஊர்பான் ஏயர் மொபிலிட்டி (Blade Urban Air Mobility) நிறுவனம் மூன்று விமான நிலையங்களுக்கு இடையிலான வாடகை உலங்கு வானூர்தி சேவைகளை ஆரம்பித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

No comments