தொடங்கியது புகையிரத சேவை புறக்கணிப்பு!


ரணில் அரசிற்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் நேற்று நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்கங்கள் சில இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தை அரம்பித்துள்ளன.

புகையிரத ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பால் சுமார் 45 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த தரப்பின் தூண்டுதலில் நடப்பதாக சொல்லப்படும் இப்போராட்டத்தால் தெற்கில் நீண்டதூர போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 ரயில் சேவைகள் இன்றைய தினம் பணியில் ஈடுபட்டதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறினார்.

சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் புகையிரத பணியாளர்களது தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நிதி அமைச்சருடன், புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்திய போதும், அது தோல்வியில் முடிந்ததையடுத்து வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.

அதன்படி புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் இணைந்து இரண்டு நாள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை அரம்பித்துள்ளனர்.

No comments