காணி பிடித்த சாந்தி:முன்னரே அம்பலப்படுத்திய பதிவு!


கூட்டமைப்பினர் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல என்பது தொடர்ந்து வெளிப்பட்டேவருகின்றது.அவ்வகையில் வன்னியில் ரணிலின் ஒத்துழைப்புடன் தனது மகனிற்கு அரச காணிகளை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா பிடித்து வைத்திருப்பதை செய்மதி புகை;கபடம் பதிவு இணையம் அம்பலப்படுத்தியிருந்தது.

எனினும் அதனை பொய்யென அவர் மறுதலித்து வந்திருந்த நிலையில் 12 ஏக்கர் காட்டை அழித்து, பாண்டியன்குளத்தில் பெருமெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா விவசாயம் செய்கிறமை சான்றுகளுடன் மீண்டும் அம்பலமாகியுள்ளது.

சாந்திசிறிஸ்காந்தராசா மாந்தை கிழக்குபிரதேசசெயலர் பிரிவுக்குட்பட்ட பாண்டியன்குளம் பகுதியில் வனவளபாதுகாப்புபிரிவு மற்றும் நீர்ப்பாசன திணைக்கள ஆசீர்வாதத்துடன் விவசாயம் செய்வது அம்பலமாகியுள்ளது.

ஏற்கனவே சிறீதரன் கிளிநொச்சியில் திரையரங்கு மற்றும் மதுபானசாலையென தூள்பறத்த மற்றொருவரான சிவமோகன் வவுனியாவில் தனியார் வைத்தியசாலைகளாக கட்டி திறந்துவருவது தெரிந்ததே.

No comments