முஸ்லீம்களிற்கு தடையா?வேண்டாமென்கிறது நீதிமன்று


வென்னப்புவ பிரதேச சபையின் கீழ் இயங்கும் தங்கொடுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வர்த்தகர்களும் வியாபாரத்தில் ஈடுபட அனுமதி வழங்குமாறு மாறவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்கொடுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வர்த்தகர்கள் வியாபாரம் செய்வதற்கு தடை விதித்து வென்னப்புவ பிரதேச சபை தலைவரினால் அண்மையில் அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
எனினும் இது தொடர்பில் இன்று வென்னப்புவ பிரதேச சபை தலைவரிடம் மாறவில நீதவான் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டிருந்ததுடன் அனைத்து தரப்பினருக்கும் வியாபாரம் செய்ய அனுமதி வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

No comments