இனப்படுகொலையாளன் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாகிறார்!

முள்ளிவாயக்கால் இறுதிக்கட்ட போரில் தமிழர்களை இனப்படுகொலை செய்ய காரணமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் சேவைக் காலம் எதிர்வரும் 21ஆம் திகதி முடிவடையவுள்ள நிலையில் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார்.

தற்போதைய இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கவின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால் அந்த இடத்துக்கு சவேந்திர சில்வா நியமிக்கவிருப்பதினாலேயே  இந்த காலநீடிப்பு என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகேவுக்கே கொடுக்கவேண்டும் என இராணுவத் தரப்பு முனைப்புடன் இருக்கின்றனராம்.
எனினும் சவேந்திர சில்வாவுக்கே இராணுவத் தளபதி பதவி வழங்கப்படும் வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments