யேர்மன் தலைநகரில்: தமிழ்த்தேசிய பண்பாட்டோடு விளையாட்டு விழா;

தமிழ்த் தேசிய அடையாளங்களுடனும் , தமிழர் பாரம்பரிய பண்பாட்டு உணர்வுடனும் , தமிழின சமூக ஒற்றுமையுடனும், பேர்லின் தமிழாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டியுடனும், தமிழீழ கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியுடனும் தமிழர் விளையாட்டு விழா 2019 பேர்லின் மாநிலத்தில்  சென்ற 16.06.2019 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது.

 இவ் விளையாட்டு விழாவில் வெளிவாரியான மாணவர்களையும் உள்ளடக்கிய பேர்லின் தமிழாலயத்தின் இல்லங்களுக்கு இடையான மெய்வல்லுனர் போட்டி , தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பில் தமிழீழ வெற்றிக்கிண்ணத்துக்கான  உதைப்பந்தாட்டம் , கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், தமிழர் பாரம்பரிய விளையாட்டான  கிளித்தட்டு  என பல்வேறு விளையாட்டுக்கள் சிறப்பாக நடைபெற்றது.

இவ் தமிழர் விளையாட்டு விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தமது பிள்ளைகளை ஊக்கிவித்தது மிகவும் மகிழ்ச்சியை கொடுத்ததோடு , இப் போட்டியில் பங்குபற்றிய விளையாட்டு வீரர்கள் /வீராங்கனைகள் அனைவரும் மிக திறமையானவர்களாக திகழ்ந்தார்கள் . இறுதியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் ,இல்லங்களுக்கும், உதைப்பந்தாட்ட கழகங்களுக்கும் சான்றிதள்களும் பதக்கங்களும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

No comments