கூண்டோடு ராஜினாமா:உறுதியானது!


அரசாங்கத்தில் பதவி வகித்த அனைத்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களை உள்ளிட்ட அனைவரும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்..

முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நடாத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு தற்பொழுது அலரி மாளிகையில் இடம்பெறுகிறது.

குறித்த சந்திப்பில் அமைச்சர் ரவுப் ஹக்கீம் இதனை தெரிவித்துள்ளார்.
.

இதனிடையே முஸ்லீம்கள் என்பதற்கு அப்பால், இலங்கையர்கள் என்ற ரீதியில் தீர்க்கமான முடிவொன்றை தாங்கள் எடுத்திருப்பதனூடாக, அனைத்து அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் விலகிக்கொள்வதாக முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், கபீர் ஹாசிம், எம்.எச்.ஏ. ஹலீமும் இராஜாங்க அமைச்சர்களான அலிஸாஹிர் மௌலானா, பைசர் காசிம், எச்.எம்.எம். ஹரிஸ், அமீரலியும் பிரதியமைச்சரான அப்துல்லாஹ் மஹ்ரூபும் தங்களது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர். ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் அஸாத் சாலியும் ஏற்கெனவே தங்களது பதவியை இராஜினாமாச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments