மைத்திரியுடன் தனித்துபோனார் சுரேன்?


ஜூன் 05ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட மரநடுகை அங்குரார்ப்பணத்தில் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மட்டடே இன்று ஜனாதிபதி மாளிகையில் பங்கெடுத்திருந்தார்.

மே மாதம் 30ஆம் திகதி முதல் ஜூன் 05ஆம் திகதி வரையான காலம் தேசிய சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் பழ மரக்கன்று ஒன்றினை இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டினார். இந்த சந்தர்ப்பத்தில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனும்; ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டார்.

எனினும் இன்று தமது பதவிகளை ராஜினாமா செய்த ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பங்கெடுத்திருக்கவில்லையென தெரியவருகின்றது. 

No comments