வதந்திகளால் திணறும் தெற்கு:வெடி கொழுத்தி மகிழ்ச்சி!


முஸ்லிம் அமைச்சர்கள்; தங்கள் பதவியை இராஜினமா செய்து அதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவையென தெரியவருகின்றது.

எனினும் ராஜினாமா தொடர்பில் உறுதிப்படுத்தி கொள்ளமுடியாதிருப்பதாகவும் தற்போது ஊடக சந்திப்பிற்கு காத்திருப்பதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்புக்களின் மத்தியில் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இன்று தனது பதவிகளை ராஜினாமா செய்திருந்த நிலையில் திருமலை நகரில் மணிக்கூட்டு கோபுரத்தடியில் வெடி கொழுத்தி கொண்டாட்டங்களில் சிங்கள மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது.

தீர்மானமிக்க குறித்த கூட்டம் தற்பொழுது அலரிமாளிகையில் இடம்பெருகிறது.

முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், தங்களது பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை அரசுடன் வைத்துக்கொள்வதற்காக ஐக்கிய தேசிய கட்சி தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது


No comments