காணாமலாக்கப்பட்ட குடும்பங்கள் எதிர்நோக்குகின்ற சமூகப்பிரச்சினைகள்!

கடந்தகால அசாதாரண நிலைமையின் போது, காணாமல் போனவர்களின் உறவினர்களான தமிழ் பெண்களிடம் இராணுவத்தினர், அரசியல்வாதிகள், துணைக் குழுக்கள் என்பன பாலியல் லஞ்சம் கோரியதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போயுள்ள தமது உறவுகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளின் போது, தங்களிடம் கையூட்டாக பணம் கோரப்பட்டதாகவும், பணம் இல்லாத நிலையில் பாலியல் லஞ்சம் கோரப்பட்டதாகவும், காணாமால் போயுள்ளவர்களின் உறவினர்களான பெண்கள் தெரிவித்துள்ளனர்.

அரச படையினரின் புலானய்வு பிரிவினர் மற்றும் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் மட்டுமல்லாமல், அரசியல்வாதிகள் மீதும் இவ்வாறு பாலியல் லஞ்சம் கோரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகம், மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட லஞ்சப் பணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம், இருந்து மீளப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுடன், பாலியல் லஞ்சம் கோரிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் .

அடுத்ததாக காணாமல் போனவர்கள் ஒருவேளை கிடைப்பார்கள். அல்லது கிடைக்காமலும் போகலாம். ஆனால் அவர்களின் உறவுகள் காணாமல் போனவர்களையே நினைத்துக்கொண்டு கவலையில் வாழ்கின்றனர்.

எனவே அவர்களுக்கு உளவள ஆலோசனைகள் வழங்கப்படவேண்டும். மேலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாழ்வாதார உதவிகளை செய்வதற்கு அரசாங்கம் உடனடியாக ஒரு பொறிமுறையை தயார்செய்யவேண்டும் .

- Nikshan sharma -

No comments