கோத்தா நட்டாற்றில்:மீண்டும் ஜனாதிபதியாக மைத்திரி?


சிறீலங்கா சுதந்திர கட்சி மற்றும் சிறீPலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக மீண்டும் மைத்திரியை ஜனாதிபதியாக்கவும் பிரதமராக மகிந்தவை முன்னிறுத்தவும் முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த அலுவலகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக தெரியவருகின்றது.

இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பது சம்பந்தமாக இரு தரப்பினரும் கலந்துரையாடி வருகின்றனர். இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்கனவே நான்கு கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று மீண்டும் மைத்திரியை ஜனாதிபதியாக தேர்தல் களத்தில் குதிக்கவேண்டுமென்ற கோரிக்கை  சிறீலங்கா சுதந்திர கட்சியால் முன்வைக்கப்பட்டிருந்ததுடன் மகஜரொன்றும் மைத்திரியிடம் கையளிக்கப்பட்டுமிருந்தது.
இந்நிலையில் கோத்தபாய தொடர்பில் மகிந்த குடும்பத்திடையே உள்ள முரண்பாட்டின் தொடர்ச்சியாக மைத்திரியையே மீண்டும் ஜனாதிபதியாக்கும் முடிவுக்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே கோத்தபாய அநாதரவாக கைவிடப்படலாமென்ற அச்சம் அவரது ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது. 

No comments