முன்னணி உறுப்பினரிடம் மன்னிப்புக் கோரிய ஆர்னோல்ட்

யாழ் மாநகர சபையின் சுகாதார குழுவிற்கு எந்த விடைமும் அறிவிக்காமல் தொடர்ந்து செயற்பாடுகள் நடைபெறுகிறது சுகாதார குழுக்குரிய அதிகாரமும் இல்லாமல் சும்மா அந்தக் குழுவில் தலைவர் பதவியில் இருப்பதில் அர்த்தம் இல்லை ஆகவே அதில் இருந்து பதவி விலகுவதாக அறிவித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன்.

அந்த குழுவில் இருக்கும் இன்னும் ஒரு உறுப்பினர் சுகாதார குழு தலைவருக்கு தன்னை விடவும் வயது குறைவாக உள்ளது ஆகவே தான் சுகாதார குழு கூட்டத்திற்கு வரமாட்டேன் என்று கூறுகின்றார் என்பதும் சுட்டிக்காட்டினார் . திட்டமிட்டு இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது ஆகவே இந்த பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் இதன் போது கருத்து தெரிவித்த திரு .ரெமிடியஸ் ஒரு நாய் இறந்து கிடந்தால் அதை அப்புறப்படுத்த கூடிய அதிகாரத்தையாவது சுகாதார குழுவிற்கு வழங்கவேண்டும் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து தான் புதிதாக பரீட்சார்த்த முறையில் ஆரம்பிக்கப்பட்ட தின்ம கழிவு திட்டத்தை சுகாதார குழுவிற்கு அறிவிக்காதது தனது பிழை என்றும் தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் அதற்காக சுகாதார குழுவிடமும் அதன் தலைவர் வ.பார்த்தீபனிடமும் மன்னிப்புக் கோருவதாகவும் பார்த்தீபனை சுகாதாரக் குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

No comments