இந்தியத்தின் கோரப்பற்கள் இந்த பெண்ணை இன்னமும் எப்படி எல்லாம் வஞ்சிக்கும்?

உலகிலேயே அதிக காலம் ஒரு அரசியல் ஈவு இரக்கமற்ற கோர வஞ்சனையால் நீண்டகாலம் சிறையில் அநீதியாக முடக்கப்பட்டிருக்கும் ஒரு பெண் நளினி என்ற விருது இழிந்த இந்தியாவுக்கு கிடைத்தாலும் வியப்பதற்கில்லை.

வாழவும் விடாமல் சாகவும் விடாமல் ஒரு பெண்ணை கொடுமைபடுத்தும் இந்திய அராஜகம் ஒழிக.

இந்திய மண்ணில் பிறந்த நளினியின் குழந்தை தனது தாயை, தந்தையை பார்க்க பிறந்த மண்ணுக்கு வர அனுமதி இல்லை.

பிள்ளையை தனிமைப்படுத்தி நிரூபிக்கப்படாத குற்றத்திற்காக நளினி வதைக்கப்படுகின்றார்.

ஏழு தமிழர்களுக்கு நடக்கும் நீட்சியான சிறை அடைப்பு கொடுமை உலக தமிழர்களால் தட்டிகேட்கப்பட்டு கண்டிக்கப்பட வேண்டும்.

சிறையில் கூட அவரை நிம்மதியாக வாழ விடாமல் எத்தனையோ சித்திரவதைகள்.. அடிப்படை உரிமை மறுப்புகள்..

எந்த பாவமும் அறியாத ஒரு குழந்தையை தனது பெற்றோரை தான் பிறந்த தேசத்திற்கு வந்து சிறையில் பார்க்க அனுமதிக்காத கொடுமை நளினி, முருகன் குழந்தைக்கு இன்று வரை தொடர்கின்றது.

சிறைக்கைதிகள் என்றால் என்ன கொத்தடிமைகளா? அடிப்படை உரிமைகளை கூட மதிக்காத இந்திய சிறைக்கொட்டடியில் இந்த அப்பாவி பெண்ணின் துயரம் என்பது நீண்டு செல்லும் தொடர்கதை.

குறைந்த பட்சம் தனது மகளை பார்த்து பேசும் உரிமையையாவது மிருகத்தனம் இன்றி வழங்க கூடாதா?

விரைவில் இவர்கள் எல்லோரும் விடுதலை ஆக வேண்டும் என்றால் தமிழக மக்கள் தீவிரமாக குரல் கொடுத்து போராட வேண்டும்.

ஏழு தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைக்கு இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் பதில் சொல்ல வேண்டும்.

காரணம் குடிமக்களின் பாராமுகங்களே அரசுகளை எதேச்சை அதிகாரத்தோடு தொண்டர்ந்தும் தான்தோன்றித்தனமாக செயல்பட வைக்கின்றன.

ஒற்றை செங்கொடியால் மூவர் தூக்கு கயிற்றை அறுத்து மூன்று உயிரை வாழ வைக்க முடியும் என்றால் இத்தனை கோடி தமிழர்கள் இருக்கும் தமிழகத்தில் ஆட்சியாளர்கள் அநீதியை தட்டி கேட்டு ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முடியாதா?

- சிவவதனி பிரபாகரன்

No comments