மசூதிகளில் நடந்த தாக்குதலை பகிர்ந்தவருக்கு 21 மாதம் சிறை !

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சிலுள்ள  மசூதிகளில்  மார்ச் மாதம் நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் உயிரிழந்த, பலர் காயமடைந்தன சம்பவத்தை அந்த நபர் சமூகவளைத்தளம் ஊடக நேரலை செய்திருந்தார். அதனை பல இணையதள பயனாளர்கள் பகிர்ந்தனர். எனியும் அதனை  முகநூல் யூடியூப் போன்ற நிறுவனங்கள் தங்களது வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்கியது.

அதேவேளை நியூசிலாந்து துப்பாக்கி சூடு தாக்குதலை சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்ததாக கிறிஸ்ட்சர்ச் பகுதியை சேர்ந்த பிலிப் ஆர்ப்ஸ் என்ற தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.

இதன் வழக்கு விசாரணையின் பின் நீதிபதி, துப்பாக்கி சூடு சம்பவத்தை குற்றவாளி பிலிப் ஆர்ப்ஸ் மனிதாபிமானம் இன்றி சமூக வலைதளத்தில் அதிகமாக பகிர்ந்து உள்ளார் என்றும்.

இத்தகைய இரக்கம் அற்ற செயலை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அதனை மிகவும் அருமையான காட்சி என வர்ணித்துள்ளார். இது மிகப்பெரிய குற்றம் ஆகையால், குற்றம் சாட்டப்பட்ட பிலிப் ஆர்ப்ஸ்க்கு 21 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கிறேன்எனதீர்ப்பளித்துள்ளார்.

No comments