அம்பாறை பிக்குவிற்கு மருத்தவ சிகிச்சை?


அம்பாறையின் தமிழ் மக்களது வாழ்விடங்களை அதிகளவில் கொண்ட கல்முனையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ள பௌத்த துறவிக்கு அவசர மருத்துவ சிகிச்சைகள் இன்று மாலை வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை   வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி இன்று (17) திங்கட்கிழமை காலை முதல் கல்முனையில்  சாகும்வரையிலான உண்ணாவிரதம் போராட்டம் ஆரம்பமாகியிருக்கிறது.

கல்முனை வடக்கு பிரதேசசெயலக முன்றலில் உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கல்முனை முருகன் ஆலய பிரதமகுரு சிவசிறீ க.கு.சச்சிதானந்தக்குருக்கள் மற்றும் அருட்தந்தை கிருபைநாதன் அடிகளாருடன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் அ.விஜயரெத்தினம் ஆகியோர் முதற்கட்டமாக உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர்.

தமிழ் மக்களது நீண்டகாலக் கோரிக்கையை தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் இழுத்தடித்துவந்துள்ளன.குறிப்பாக கிழக்கில் ஆதிக்கம் செலுத்தும் முஸ்லீம் அரசியல் தலைமைகள் இதற்கு முட்டுக்கட்டை போட்டுவந்திருந்தன.

இந்நிலையிலேயே தமிழ் தரப்புடன் இணைந்து கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதியும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளார்.போராட்டம் தொடர்ந்தும்; தமிழ்ப்பிரதேசமெங்கும் வியாபிக்கும் எனவும் முதலில்  அம்பாறை மாவட்டத்திலும் தொடர்ந்து மட்டுக்களப்பு மாவட்டம் எனத் தொடர்ந்து முழு வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் போராட்டம் விஸ்தரிக்கப்படுமென ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளது.

No comments