லண்டன் மேயர் மீது டிரம்ப் மீண்டும் தாக்குதல்!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மேயராக பாகிஸ்தான் வம்சாவளியான  இருந்து வரும் சாதிக்கானை கடுமையாகச் சாடியுள்ளார்.

லண்டன் நகரில் தொடர்ந்து கத்திக்குத்து சம்பவங்கள், வீதி வன்முறைகள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் லண்டனுக்கு புதிய மேயர் வேண்டும். சாதிக்கான் ஒரு அழிவு சக்தி. அவர் நீடித்தால் நிலைமை இன்னும் மோசமாகி விடும். அவரால் தேசத்துக்கே அவமதிப்பு. அவர் லண்டன் நகரை அழித்து வருகிறார் என தனது கீச்சகப் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  குறிப்பிட்டு உள்ளார்.

No comments