பௌத்த பீடங்களிற்கு குழையடிக்கும் மைத்திரி!




மீண்டுமொரு தேர்தல் மூலம் ஜனாதிபதியாகும் கனவிலிருக்கின்ற மைத்திரி பௌத்த பீடங்களை குளிர்விக்க பாடுபட முற்பட்டுள்ளார்.

அஸ்கிரிய பிரிவின் மகாநாயக்கர் வண.வரக்காகொட ஞானரத்தன நாயக்க தேரரின் தலைமையில் அங்குரங்கெத்த, மாதன்வல ரஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் தூபியில் புனித சின்னங்களை பிரதிஷ்டை செய்யும் புண்ணிய நிகழ்வு இன்று (18) பிற்பகல் நடைபெற்றிருந்தது.நீண்ட இடைவெளியின் பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதில் பங்கெடுத்துள்ளார்.

இந்த நிகழ்வில்;, மல்வத்தைப் பிரிவின் அனுநாயக்கர் வண.திம்புல்கும்புரே விமலதம்ம தேரர், அஸ்கிரிய பிரிவின் அனுநாயக்கர் வண. ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகளும் பெருமளவிலான பக்தர்களும் கலந்துகொண்டனர்.

வரலாற்று ரீதியான பல சிறப்புக்களைக் கொண்ட மாதன்வல ரஜமகா விகாரைக்கு இன்று பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள், முதலில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தூபியில் புனித சின்னங்களை பிரதிஷ்டை செய்யும் புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்ட விசேட நினைவுப் பரிசினை அஸ்கிரிய பிரிவின் மகாநாயக்கர் வண. வரக்காகொட  ஞானரத்தன தேரர் ஜனாதிபதியிடம் வழங்கினார்.

No comments